வர்கலா சுற்றுலா

நான் உங்கள் ஆனந்த், திருநெல்வேலி கல்வி நிலையம் ஒன்றில் போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன்.... விடுமுறை நாள் ஒன்றில் இன்ப சுற்றுலா ஒன்றிற்கு ஆயாததம் செய்தோம். அங்கு நான் அனுபவித்த புதுமையான நினைவுகளை இப்பக்கத்தில் பதிவிடுகிறேன்... வெள்ளி கிழமை (14/07/23) அன்று இரவு 10 மணியளவில் என் நண்பர்களான கிருஷ்ணா, முத்து, போஸ், ஹரி மற்றும் ஆனந்துடன் ஒரு அழகான பயணத்தை தொடர்ந்தேன்...

இலக்கினை அறிந்த பருந்தை போல பறந்து கொண்டிருந்தோம் இரண்டு பைக்கில்...சலனமின்றி கிடந்த இரவை சத்தமிட்டு எழுப்பினோம்... காற்றினைக் கிழித்து காடு ஒன்றினை அடைந்தோம்...பசுமையான மரங்களும் பனிமலர் பூக்களும் எங்களை வரவேற்றது... இதமான காற்றும் இத்திசை என்று அழைத்தது..என்னவென்று சொல்வேன்...இந்திரனின் அந்தப்புர ஆறு அருவியாய் விழுந்து கொண்டிருந்தது போலும்.. அழகான மங்கை ஒருத்தி சிகை பறக்க குளித்து கொண்டிருந்தாள் போலும்... ஆம் அவளுக்கு குற்றாலம் என பெயராம்... ஏதோ இனம் புரியா மகிழ்ச்சி... இதமான காற்று இசைபாடியது உள்ளத்தில்... தெவிட்ட தெவிட்ட குளித்து முடித்தோம்.. சூடான தேநீருடன் சுகம் கண்டோம்...
இரவு 1.30 மணியளவில் நாணும் எனது நண்பர்களும் குற்றாலம் மெயின் அருவி வந்து சேர்ந்தோம்... சீசன் என்பதால் இரவானாலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது..குளிப்பதற்கு முடியாமல் போனது... 
மனமோ இன்னும் சில அற்புதங்களை காண ஆசைபட்டது...செங்கோட்டைக்கு மிக அருகில் கேரளா என்பதால் கேரளத்தின் வர்காலா என்னும் சுற்றுலா தளத்திற்கு செல்ல முடிவு எடுத்தோம் ...
இரவு 3 மணியளவில் செங்கோட்டையிலிருந்து கொல்லத்திற்கு ரயிலில் பயணப்பட்டோம் ... பொழுது புலர்ந்த சமயம் மனமோ புலியை போல பாய்ந்து கொண்டிருந்தது... ஏதோ ஒரு அழகை தரிசிக்க போவதை தெரிந்து கொண்டது போலும்.. தென்மலை,புனலூர், கொட்டாரகரா வழியாக காலை 7.30 மணியளவில் கொல்லம் வந்து சேர்ந்தோம்... உழுப்பி உணவகத்தில் காலை சிற்றுண்டி சிறப்பாக முடிந்தது...

கேரளத்து வாசனையை நன்கு ரசித்தோம்... அங்கிருந்து அரைமணி நேர பயணத்திற்கு பிறகு வர்காலா வந்து சேர்ந்தோம்...வாலிபர்கள் என்பதால் காண்பதெல்லாம் கலை ஒவியங்களாகவே தெரிந்தது... கேரளத்து இளம் பெண்களெல்லாம் ஓவிய பாவைகளாகவே தெரிந்தனர்... கண்களில் பட்டதையெல்லம் காதலித்து சென்றோம்... வர்கலா பிரம்மனின் விசேஷ ஓவியம் போலும்... பூமகள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் இத்தகைய அழகை பரிசாக பெறுவதற்கு... வானம் தரையிறங்கியது போல காணப்பட்டது அலை கடல்...
ஏராளமான மீன்பிடி படகுகளும் கடல் பறவைகளும் பருந்துகளும் ஆங்காங்கே வேட்டையில் ஈடுபட்டிருந்தது.மழைக்காலம் என்பதால் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது... பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் அக்கடலின் அழகில் வசியபட்டிருந்தோம் .. நண்பர்கள் அறுவரும் கரையோரம் உலா வந்துகொண்டிருந்தோம் அவ்வப்போது கரை வரும் அலைகளில் கால் நனைத்தவாறு.! 
அழகிய நெய்தல் பகுதி என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். அயல் நாட்டு இளம்பெண்களும் ஆண்களும் சிறுவர் சிறுமிகளும் வயோதிகர்களும் வலம் வந்து கொண்டிருந்தனர்...கடற்கரையின் உச்சியில் அழகழகான ரிசார்டும் பீச் நாகரிக உடைகளும் நகைகளும் எமை வெகுவாக கவர்ந்தது.காதலர்களின் கையும் கரையோரம் ஓங்கியிருந்தது..! கால்கள் சளைத்தாலும் கண்கள் சளைக்கவில்லை... சிறிது நேர ஓய்விர்க்கு பின்னர் மதியம் 12 மணியளவில் வர்காலாவிலிருந்து கிளம்பினோம்...இனிமையான ஒரு புதுமையான நினைவுகளை சுமந்தபடி வர்காலாவிர்க்கு விடை கொடுத்தோம்.

மாலை 4.30 மணியளவில் கொல்லத்திலிருந்து செங்கோட்டைக்கு நகர்ந்தோம்... அந்தி மயங்கிய சமயம்.. மனமோ பூத்திருந்தது... ரயில் பாதை பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் மெதுவாகவே மலை ஏறியது ரயில்..! 
வாழ்வில் இதுவரை எங்கும் காணா அற்புத அழகை கண்டேன்... எண்ணற்ற மரங்களும் மூலிகைகளும் ஆறுகளும் ஓடைகளும் ரயில் குகைகளும் குளிர்ந்த காற்றும் எங்களை ஆட்டுவித்தது.. தென்மலையின் கன்னாரா பாலம், ஆர்யங்காவு பாலத்தின் கம்பீர அழகு பிரம்மிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது... மலைவாழ் மக்களின் இல்லங்களும் அவர்கள் இயற்கையோடு இணைந்த நிலையும் விவரிக்க முடியாது... உண்மையில் கேரளம் கடவுளின் நாடுதான் என்பதை ஐய்யமுற உணர்ந்தேன்.. 
இரவு தொடங்கி இரு நாழிகை இருக்கும்...7.45 மணியளவில் செங்கோட்டை வந்து இறங்கினோம்..அதிவிரைவில் பாவூர்சத்திரம் வந்து சேர்ந்தோம்... இரவு உணவு முடிந்து பாசத்தோடு வழியனுப்பி வைத்தேன் என் நண்பர்களை...

ரயில் பயணத்தில் நாங்கள் செய்த லூட்டிகள், நண்பன் போஸின் காமெடி கலந்த பேச்சு...வயது பெண்களின் மீது காதல் பொடி தூவியது... ரயிலில் மகிழ்ச்சியால் கூச்சலிட்டது,..எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..காதலர்களின் சில்மிசங்களை கலாய்த்து தள்ளியது...இவையெல்லாம் என்றும் என் மனதில் நிழலாடி கொண்டிருக்கும்...!!
.                    போஸ்
                           முத்து
.                             ஆனந்த் 
                        கிருஷ்ணா
                          ஹரி 
                                         
                                         அன்புடன்
                                         ஆனந்த் மு 

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா