பாட்டு ஒன்னு பாடவா
ஆண் : ஆடிவரும் வெள்ளி நிலவே...
என்ன தேடிவரும்
பொண்ணு நிலவே...
பாட்டு ஒன்னு நான் பாடவா..
காதல் கொஞ்ச நீ கூடவா...!
பெண் : ஆடிவரும் வெள்ளி நிலவு..
உன்ன தேடிவரும் பொண்ணு நிலவு...!
காட்சி ஒன்னு நான் காட்டவா..
காதல் சூடு கொஞ்சம் ஏத்தவா...!
ஆண் ஆடிவரும் வெள்ளி நிலவே...
என்ன தேடிவரும்
பொண்ணு நிலவே.....!!
ஹா ஹோ..... ஓ
ஆண் : வா வா கள்ளி நிலவே...
வளர்திடும் அல்லி மலரே...
கனித்திடும் முத்தமொன்னு கையில் தரவா....
துடித்திடும் தேகத்திடம் சொல்லி விடவா....!
பெண் : பூவ.. இந்த பூவ...
மாமே உனக்கு தரவா...
மான இந்த மயில என்
ராஜா உனக்கு உறவா...!
ஆண் : பூவே சொல்லு சொல்லு...
நான் பறிக்க சம்மதம்னு
பெண் : நானே சொல்லி விடவா... நல்ல விளக்கு கொண்டு வரவா...!
ஆண் : படுக்கையும் நனையுதடி
நல்ல பாயும் வேனுமடி....
பெண் : விளக்கும் விசும்புதடா..
நல்ல திரியும் வேணுமடா...
ஆண் : ஓடிவரும் பொண்ணு முயலே..
ஓசை ஒன்னு கேட்குதா...
பெண் : நாடிவரும் முத்து மழையே...
நதியும் இங்கே பாயுதா...
ஆ .... ஹ.... ஹோய்......
ஆண் : ஆடிவரும் வெள்ளி நிலவே...
என்ன தேடிவரும்
பொண்ணு நிலவே...
பாட்டு ஒன்னு நான் பாடவா..
காதல் கொஞ்ச நீ கூடவா...!
பெண் : ஹா ஹா ஹெய்....
ஆண் : இந்திரதேவ ராணி சேலை ஒன்னு தரவா...
பெண் : சந்திரலோக ராசா என் இரவு உனக்கு வரவா...
பெண் : ஆடிவரும் வெள்ளி நிலவு..
உன்ன தேடிவரும் பொண்ணு நிலவு...
காட்சி ஒன்னு நான் காட்டவா..
காதல் சூடு கொஞ்சம் ஏத்தவா...!
பெண் : கல்லும் கறைஞ்சு போச்சு..
சுட்ட பாலும் தெறஞ்சு போச்சு....
வேகம் கொஞ்சம் குறைடா..
உன் வேட்டி ஈரமாச்சு...!
ஆண் : ஓஹோ ஹோய்....
ஆண் : சொக்கி மயக்கும் என் சுந்தரகிளி...
மொட்டு விரியும்
எந்தன் முல்லை மலரே...
அருகில் கொஞ்சம் வாடி...
என்ன அணச்சு அள்ளி போடி.
பெண் : ஆலமரப்பூவு அத்திமரப்பூவு
அத்தனையும் வாடி
அச்சபடுது..மாமா
எண்ணத்திரி விளக்கு
அத்தனையும் அறிஞ்சு சத்தமிட்டு சிரிக்கு...
நீயும் கொஞ்சம் இருடா...
ஆண் : என் வீணைகளை மீட்டும் அந்த வேதவள்ளி நீ...
ராகங்களை தொடுக்க இந்த ராத்திரி கொஞ்சம் தாடி
பெண் : திண்ணையில பூன... கூரையில கோழி... விடியும் வரை காத்திருக்கு
தள்ளி கொஞ்சம் போடா...!
ஆண் : ஆடிவரும் பாடிவரும்
நந்தவனப்பூவு... நீ தேனிருக்கும் பாலிருக்கும் தேவலோக மாது....!
பெண் : போதுமடா..போதுமடா.
பொழுது விடிய போது...
புலர்ந்த பின்னு புணர்ந்த கதை ஒன்னும் இல்ல கேளு..
ஓ ஹோ.... ஹோ....
ஆண் : ஆடிவரும் வெள்ளி நிலவே...
என்ன தேடிவரும்
பொண்ணு நிலவே....!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment