காதலின் தீபம்
❤️என் உள்ளமும் உணர்வும் உறைந்து போனது...
உன் கண்ணில் என் பிம்பம்
❤️சதையாலான
சவப்பெட்டி
அவள் விழிகள்...!!
❤️உயிர்களை கொல்லும்
மந்திர குளம்
அவள் ஊமை விழிகள்...!!
❤️என் நெஞ்சம் மஞ்சம்
இரண்டிலும் தஞ்சம் கொண்ட நந்தவனப்பூ அவள்...!
❤️பார்வையிலே விதைத்து விட்டு சென்றாய்.காதல் என்னும் விதையை..
மலர் பூத்து நிற்கின்றேன்..
எனை வாசம் செய்து விடு...!!
❤️என் மனவானில் சஞ்சரிக்கும் பொன் நிலவு நீ...
மோக மேகங்கள் அவ்வப்போது நமை கடக்கின்றன...!!
❤️முத்தங்கள் மொத்தம் எத்தனை
சத்தமில்லாமல் கேட்டேன் அவளிடம்
சத்தமில்லாமல் பதிலளித்தாள்..
என் கன்னங்கள் சிவந்தது...!!
❤️சேற்றினில் மலர்ந்த செந்தாமரை நீ என்னுடன் வா..
என் அக சந்நிதியில்
உனை ஸ்தாபிப்பேன்...!!
❤️உன் ஸ்பரிசம் பட்ட அன்றே..
பரிசம் போட்டு விட்டேன்...
பகலும் இரவும் இனி எனக்கு சொந்தம்...!
❤️சன்னலோர இருக்கையில் சாய்ந்தபடி தூங்கினேன்..கனவிலே கலியாணம் எனக்கு அவளுடன்... இறுதி ஊர்வலத்தில் எவனோ எறிந்த சாமந்திப்பூ என் மேல் வந்து விழுந்தது...!!
❤️ பிரம்மனின் தூரிகைத் துளிகள்
அவள் முகத்தில் பருக்களாக..!
❤️ ரோட்டோர கடைதான்
குட்டி நிலாக்களை விற்றுக் கொண்டிருந்தாள்..அவள் விந்தையானவள்..!
❤️அவளை நிலாவென்று வர்ணித்தேன் பலமுறை ...
அதனால் தான் ஏனோ அவள் நிலவாகிப்போனாள்...!
❤️நான் குண்டாகி விட்டேன் என்கிறாய்...
அனுதினமும் பசியாற்றியது நீயல்லவா...!
❤️ஓடாத கடிகாரம் அது
உன்னையும் என்னையும் பார்த்தேன்
திசைமாறிய முட்களாய்...!
❤️உணவு பரிமாறினாள் என்
உள்ளம் தடுமாறியது..
அவள் கரத்தில் என்ன மந்திரக்கோலா..!!
❤️என் மனம் கண்ணாடி தான்
அதை உடைத்தது நீ..
ஒருநாள் அது உனை
பதம் பார்க்கும்..!
❤️ஒரு கன்னத்தில் முத்தமிட்டாள்... மறுகண்ணம் சிவந்து போனது...
வெட்கத்திலா... வேதனையிலா...!!
❤️என் ஐவிரல் பள்ளங்கள் நிரப்பப்படுமா உன்னால்..
கைவிரித்தப்படி நான்..!!
❤️கல்லூரி கரும்பலகையில்
காதல் என்று எழுதினேன்..
அழித்துவிட்டுசென்றாள்..
வேதனைபட்டோம்
நானும் கரும்பலகையும்...!!
❤️அமாவாசை நாளன்று ஆயிரமாயிரம் விண்மீன்கள்
ஆவலோடு பார்க்கின்றன...
அவள் முகத்தை...!
❤️மோக மின்னல்
சட்டென்று பாய்ந்தது...
பற்றிக்கொண்டது கட்டில் தீ...!
❤️அவள் நிலவல்ல
வானம் தொலைத்த
விண்மீன்...!
❤️ஓவியப்போட்டி..!
அவளுக்கே முதல் பரிசு..
நான் விரல்களால் வரைந்தேன்.. அவள் இதழ்களால் வரைந்தாள்..🙈
❤️ சத்தமில்லாமல் கொன்றுவிட்டாள்.
கட்டில் யுத்தங்களை
கண்களால் நடத்தியே...!!
❤️இரு மரங்கள் உரசியது
பற்றியது காட்டுத்தீ...
இரு மனங்கள் உரசியது பற்றிக்கொண்டது காதல் தீ...!!
❤️ஒளிப்பட்டதும் களிப்பாடும்
மலர் மொட்டுக்களே....
அவள் விழிப்பட்டால் தாம் என்னாவீர்கள்...!!
❤️ என் காதல் கைகூட வேண்டும்
கடவுளிடம் வேண்டினேன்
கன்னத்தில் கைவைத்தப்படி
அரசமரத்தடி பிள்ளையார்...!!
❤️ தேன் தேடி தேனீக்கள்
என் வீட்டருகே வந்தது
உன் வீட்டிற்க்கு வழி சொன்னேன்
மலரே மறைந்துகொள்...!!
❤️ காதலும் காமமும்
புத்தகத்தின் அட்டைப்படம் நீ....!!
❤️ நிலவினைக் கண்ட
அல்லி மலராய்
பூத்து நின்றேன்... உன் கண்களில் நான்...!
❤️ உன்னோடான இரவுகளில்
உயர உயர பறந்து கொண்டிருந்தேன்....
என் இறகுகளும் என் காதலும் உதிர்ந்து கொண்டிருப்பதை அறியாமல்...!
❤️ என் இதயத்தின் குரல்
எனக்கு கேட்கின்றது
அவள் வருகின்றாள்...!
❤️ நம் மோக மேகங்கள்
மோதிக்கொண்டது...
கொட்டித்தீர்த்தது மழை..!
❤️ என் அந்தரங்க வானில்
அனுதினமும் மின்னிக்கொண்டிருக்கிறாய்...
தொலைதூர நிலவாய்..!
❤️ உயிரும் உயிரும்
ஒன்றிணைந்தது..
உடைந்தது கட்டிலும்
கண்ணாடி வளையலும்...!
❤️ அழகினால் கொலைகள் செய்பவள் அவள்..
கண்ணாடி வளையல்களாள் கைது செய்தேன் அவளை..!!
❤️ அவள் பிறந்தநாளுக்கு குரங்கு பொம்மை பரிசளித்தேன்... கோபத்தில் தூர எறிந்துவிட்டாள் சந்தேகமில்லை அவள் குரங்கு தான்...!
❤️ திரியாக கரைகின்றேன் ...
தீபமான உனை நினைத்து...!!
❤️ என் கருப்பு வெள்ளை
கனவுகளின்...முதல்
கலர்ப்படம் நீ...!
❤️ சிறகுள்ள மீன்களை கண்டேன்...
அவள் கண்களில் ..!
❤️ நம் காதல் பயணங்கள்
இனிதே தொடங்கியது...
நம் நயணங்களில் இருந்து...!!
❤️ அமைதியாய் உறங்கும்
எரிமலை நான்...
என்னுள் நீந்த நினைக்காதே . !
❤️ தலைசிறந்த சிற்பி
மார் தட்டிக்கொள்வார்
அவள் அப்பா...!
❤️ பட்ட மரமாகிய என்னுள்... கொத்தி குடைந்து புகுந்தாய்..
சிறிதாய் துளிர்விட்டது என் கிளைகள்...!
❤️ பருவம் வரை காத்திருந்தேன்
அந்த பூவிற்கு...
அழகை ரசிக்கவா..
தேனை ருசிக்கவா...!
❤️ காதல் திருமணம்..
விரட்டியடித்தது சொந்தக்கார நாய்கள்...
ஆரத்தி தட்டோடு காத்திருந்தது சுடுகாட்டுப் பேய்கள்...!
❤️ இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது ...
இருட்டான அறைக்குள்..!
❤️ என் மனவானில்
எத்தனையோ நட்சத்திரங்கள் பூக்கின்றன ..
நிலவாய் நீ வரவேண்டும்...!!
❤️ என் மனக்காட்டில்
ஏன் நுழைந்தாய்
அனைத்து மரங்களும்
மலர்ந்துவிட்டது...
வண்ணத்துப்பூச்சிகள் வந்து விடும்..!
❤️ காதலிக்கத் தொடங்கிவிட்டோம்
வா கண்ணீர்க் கடலில்
நீந்தலாம்...!
❤️ ஜானா முழமா..
அளந்து கேட்டார்
மல்லிப்பூ விற்கும் பாட்டி..
அளவில்லா காதலென்றேன் ..!
❤️ தேநீர் பருக
தினமும் வருவாள்
என் மனதை பருகி
மாயம் செய்வாள்...
❤️ மூன்றாம் பிறை அவள்
முகத்தில் சுருக்கங்களோடு முத்தமிட்டாள் ...
முழு நிலவானேன்...!
❤️ நம் காதல் என்றும்
உறங்குவதில்லை
அது நம் கல்லறை மீதும்
விளையாடிக் கொண்டிருக்கும் ..!
❤️ அவள் உள்ளங்கையில்
முத்தமிட்டு தூரே ஊதிவிட்டாள்... காற்று காப்பாற்றி
என் கைகளில் ஒப்படைத்தது..
பத்திரமாய் வைத்துக்கொண்டேன்.!
❤️ இடம் விற்பனைக்கு
அவள் இதயத்தில் எழுதியிருந்தாள்..
வாடகைக்கு கேட்டு வந்தேன்...!
❤️தொடரும் கனவுகளில் தொலைகின்றேன்.. தூரத்தில் நீ தெரிகின்றாய்.. இன்னும் தொடர்கின்றேன்...!
❤️ஆயிரம் பாவைகளில்
அவள் மட்டுமே ஓவிய பாவை..
அவள் வண்ணங்கள்
ஒட்டிக்கொண்டது என்னுள்...!
❤️அவளை கண்டபோது
அறிந்துகொண்டேன்..
அந்த ஆயனரை விட அவள் அப்பன் சிறந்த கலைஞன் என்று...!
❤️அவளுக்கு பிடித்த பறவை ஆந்தையாம்..இன்றிலிருந்து
அந்த இரவும் எனக்கு பிடிக்கும்...!
❤️இதயத்தை இடம் மாற்றுவோம்..
இருக்க அணைத்துக்கொள் என்றேன்..!
எச்சிலை இடம் மாற்றிவிட்டாள்..! 😅
❤️இருட்டு அறையில் பதுங்கியிருந்தது என் இதயம்..
சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தது அவள் விழிகள்..!
❤️மூச்சிழுத்து முத்தமிடு
செத்தாலும் வாழட்டும்
நம் காதல் ..!
❤️சத்தமாய் கத்திவிடு
சங்கடங்கள் குறையும்...
முத்தமாய் குடுத்திடு
மொத்தமும் கரையும்...!
❤️காதலெனும் திருவிழாவில் அன்று அவளை தொலைத்தேன்..
கனவெனும் தேரில் இன்று
உலா வருகின்றாள்...!
❤️நம் உறவின் தூரத்தை
அளவிட முயன்றேன்...
ஊர் தாண்டும் முன்பே முடிந்துவிட்டது...!
❤️செல்லும் இடமெல்லாம்
ஒருவரை காதலித்தேன்...
என்னை மட்டும் வெறுத்தேன்..!
❤️எதேச்சையாக கண்டேன்
அந்த முகத்தை..
இன்றுவரை அனுபவிக்கின்றேன்
அதன் தாக்கத்தை...!
❤️மனநோய் முற்றிவிட்டால்
மரணம் வந்துவிடும்
காதலர்கள் வாக்கு...!
❤️இருவருக்கும் இடையேயான மனநோய்க்கு காதல் என்று பெயர்...!
❤️ராஜாவும் நானே
அரண்மனையும் நானே...
ராணியாக நீ வந்தால்..!!
❤️என் மரணத்திற்கு
துணை வருவாயா என்றேன்...
இல்லை.. மலர் வளையத்தோடு
மயானத்தில் காத்திருப்பேன் என்றாள்..!
❤️பொய்தான் எனினும்
ரசிக்கின்றேன்...
உரைத்தது நீயல்லவா...!
❤️என் காதலி எனக்கு பரிசளித்தாள்
மருந்துப்புட்டி ஒன்று..
அன்று புரியவில்லை
இன்று விளங்கியது...
❤️அழகி அவளைக் காணாமல்
அலைகடலும் கொந்தளிக்கிறது..
அமாவாசை நாளில்...!
❤️மேடையில் ஒரு பூ
சுற்றிலும் வண்ணத்துப் பூச்சிகள்..
திருமணவிழாவில்...!
❤️என் கவிதையை
உண்கிறது அவள் உதடுகள்..
உயிர்துடிக்குது என்
கவிதையின் நரம்புகள் .!
❤️நீ என் அருகில் இருந்தும்
நிலவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்..
நானே ஆகச் சிறந்த முட்டாள்..!
❤️சொர்க்கமா நரகமா
எதைத் தேர்ந்தெடுப்பது..
இரண்டையும் தந்துவிட்டு சென்றாள் ஒரு பெண் ..!
❤️அழுக்கு துணியெல்லாம்
அவளின் வாசனை
அலச மனமில்லை
அப்படியே அணிந்து கொண்டேன்.!
❤️அவள் முழுமதியும் அல்ல
பிறைமதியும் அல்ல...
அவள் வளர்மதி...!!
❤️தீபம் உனை தீண்டினேன்..
மெழுகுவர்த்தி என்பதை மறந்து...!
❤️இரவுக்கு ஆயிரம் கண்களாம்..
என்னிரவுக்கு ஒரே கண்.. அதில் நீ மட்டுமே தெரிகின்றாய்...!
❤️முத்த சூத்திரம்
மொத்தமும் கற்றுக் கொண்டேன்..
எழுதிக் காட்டுகிறேன்
என் அருகில் வா...!
❤️இருயிதழ் தொடவே
ஒருவிரல் புரட்சி
இச்சகள் பல...!
❤️இரவு வந்தது
இதிகாசம் பயின்றேன்
நிலவிடமும் அவளிடமும்..!
❤️இன்று வரை காத்திருக்கிறேன்
அந்த பௌர்ணமிக்கு
அமாவாசையாகிய நான்!
❤️நான் இங்கிருக்கிறேன்
கத்தி சொல்லுவேன்
அந்த வானத்து தேவதைகளுக்கு..!
❤️அவள் மலர் முகத்தில்
சில மொட்டுகள் வளர்ந்துள்ளது...
பருவகாலம் வந்துவிட்டது போலும்..
❤️வாரக் கடைசியில்
என் காதலையும் கண்ணீரையும்
புதுப்பித்துக் கொள்வேன்.
வயல்காட்டு கோவிலொன்றில்..!
❤️கனிகள் தாங்கிய
மரம் அவள்..
நிழலில் தங்கியே
மோற்றம் பெற்றேன்...!
❤️ஆயிரம் பாவைகளில்
அவள் மட்டுமே ஓவிய பாவை..
அவள் வண்ணங்கள்
ஒட்டிக்கொண்டது என்னுள்...!
❤️நதியின் பயணம்
கடலை சேரும்வரை
நம் காதலின் பயணம்
கல்லறையில் சேரும்வரை...!
❤️இலையாக நீ வந்தால்
நதியாக நானிருப்பேன்...
என் வாழ்வு எதுவரையோ அதுவரை துணைநிற்பேன்...
❤️கண்ணுக்குள் நீந்துவதால்
காதலும் மீன் தானோ....!
❤️என் கண்ணீர் எனக்கு புதிதல்ல.
உனக்காக சிந்துகின்றதே அதுதான் புதிது...!
❤️உலகம் மறைவதை
ஒருமுறை பார்ப்போம்
வா முத்தமிடலாம்...!
❤️என் கண்ணிற்குள் நுழைந்தவள் ஏணி போட்டு இறங்கி கொண்டிருக்கிறாள் .. இன்னும் இரண்டு மணி நேரத்தில் இதயத்தை சென்றடைவாள்..!
❤️தொடரும் கனவுகளில் தொலைகின்றேன்.. தூரத்தில் நீ தெரிகின்றாய்.. இன்னும் தொடர்கின்றேன்...!
❤️அவளை கண்டபோது
அறிந்துகொண்டேன்..
அந்த ஆயனரை விட அவள் அப்பன் சிறந்த கலைஞன் என்று...!
❤️நீரில் ஊறிய பூங்கொடியாய்
நித்தம் நித்தம் பூக்கின்றேன்.. சித்தம் வருடும் உன் நினைவால்...
❤️உள்ளிருக்கும் ஆவியே ஒளிந்துகொள்... உனைத் தேடி அவள் வருவதற்குள்...!
❤️அவளை கண்டதும் பார் பக்தி வரும் என்றனர் சிலர்...
முக்தியே தந்துவிட்டாள்..
❤️என் மோககுளத்தில் மூழ்கி குளிக்கின்றாய்... மோட்சம் பெற்றது நானல்லவா...
Comments
Post a Comment