என் காதல் கங்கை

கோவக் கனிவாய் தனிலே
          கொடி முல்லை வளர்ந்து
செவ்விதழ்          மலர
           சிரிப்பொலி தவிழ்ந்து
செங்கதிரான் சிவந்தினம் செய்ய
            அங்கமெல்லாம் தங்கமோ !
மைவிழி              மங்கை 
            தரங்கத்தில் கங்கை
மையிருட்டில் சங்கமென வானில்
            திங்களென நிற்கும் ராணியோ!
பிறைசூடி முடியிலனிந்து 
            ஒளிகுன்றி தாழம்பூ விளங்க
கங்கமொழி நங்கை யாள்
           அலங்குசெய் வனிதையோ !
வாந்தாரகை குழநம் சேர்த்து
             வாவிவாழ் செம்முளரி சரமெடுத்து
அரும்புமல்லி ஆரமொட்டி 
              மணிக்கழுத்தில் மாலையோ!
அவள் மன்மதனின் தேவியோ !!
             செஞ்சந்தண மிடையாள்
அவள் செவ்வரளி இதழாள்
              நல்மொழி வாய்மலர
நின் உள்ளம் உவப்ப
              உயிர் கரையும் உன்னிடத்தே..!!

                                      அன்புடன்,
                                        ஆனந்த் 

              
     





 

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா