ஒரு விழி காதல்
சொக்கி மயக்கும் உன் அழகில்
சிக்கி தவிக்கும் சிலந்தியடி நான்
அன்புலியெனும் அழகினால்
இவ்வெம்புலியை வென்றவளே!
அக விழியைக் கொன்றவளே
நீ மயிலாக வந்தால்
நான் மழையாக பொழிவேனடி!
தாழம்பூ நிறத்தழகி என்
தாமரைப் பூவழகி!
தண்டை அணிந்த தங்க நிலவே
தாமரைக் குளத்தின்
கெண்டை மீன்களும் ஏங்குதடி !
சொல்லிவிட்டு சிரியடி.....
வழி நெடுகிழும் வைரங்கள்!!
கிழிஞ்சல் விழியழகி அவள்
கிண்கிணி இடையழகி
வேல் அம்பு வென்றவன் - இவ்
விழி அம்பில் விழுந்தேனடி...!
உன் மேலுதட்டில் எச்சிலூட்டி
என் கீழுதட்டில் முத்தமிட்டால்
இப்பூலோகம் வென்று
மேலோகம் செல்வேனடி உயிரே!
புவியெங்கும் புஷ்பங்கள் ஏங்குதடி
உன் புருவம் உயர்த்தி
புலன் மோட்சம் வழங்கிவி்டு !
கோபம் கொள்ளுதடி காந்தள் மலர்
குளவி வண்டு உன் கூந்தலை அடைந்ததால் ......!
கதிரவனும் வெட்கின்றான்
என் காரிகையின் விழியினைக் கண்டு..... அன்பே
பஞ்சணையிலும் உறக்கமில்லை
நெஞ்சமெல்லாம் நீயிருப்பதால்
அம்பு விழியில் அன்பைக் கொட்டிய
அனிச்சம் பூவே.....
இதுவே இறுதியானாலும்..!
இறந்தும் பறப்பேன் ஈசலின் இறகாக ......!!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment