ஓர் உண்மை காதல்

   
    கருவிழி முதலே... இரு விழி                    கோர்த்து
    கரமொட்டி நுதலில் 
    உதரத்தால் ஒட்டி
    உயிர் நீயே நின்
    உள்ளம் நீயே... விடலை  உவப்ப            முகமதியாள் நாணி
    உவந்து ! புணர்ந்து ! 
    உலக மறந்து 
    உறவு துறந்து
    கவிதொழும் குயிலாய்
    காதலைப் பொழிந்து.
    கொஞ்சின மொழிந்து
    அன்பினில் கடிந்து ...இழுத்து
    அடி இதழ் நுகர்ந்து ...கொடுத்து
    ஆயிரம் நிலவாய் அவளன கண்டு
    உணர்வு சொரிந்து...
    உள்ளம் மறந்து
    மோகத்தின் தாகத்தால்
    ஊணுடல்    புணர்ந்து.... 
    மணவறை முன்பே
    பள்ளியறை படர்ந்து ...மலர்ந்து
    பண்  பொழிந்துமகிழ......!!                        சொந்தம் அறிந்து அந்தம்கொடுக்க
    உறவின் முடிவால் உள்ளமும்                  கசந்து....
    மனமும் ஒன்றி மாண்டிட எண்ணி
    ஓடும் ரயிலில்... புலியென பாய்ந்து
    ஒழுகின இரத்தம்....!                                    ஊர்வலம்  போகியே.....!!!
    உடலினை அழித்து உயிரினை              துறந்து ... 
    ஊமையாய் போகுது... உள்ளத்தில்      மகிழ்ந்து...!
    விழியால் மலர்ந்து சுழியாய்              வளர்ந்து... ஆவியாய் போகுது
    விதியில் விழுந்து....!!



                                                அன்புடன்
                                                 ஆனந்த்

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா