காதல் மொழி
வளரும் காதல்
புறக்காட்டின் தேனீயோன்றை
என் அககாட்டில் சிறைகொண்டன்
நெஞ்சினில் கொட்டிவிட்டது ....
அன்று பட்ட காயமானது
இன்று வரை வளர்கிறது
காதலாக......!!
என் மோகமொழி
ஏககால அம்புகள்
துணிந்தது எத்தனை...!
என் இதயம் பிளக்க
உன் ஈர உடல் காணுகையில்.....!!
சுவாசிக்கின்றாள்
அகிலத்தின் அனைத்து
இன்னிசையும் தோற்றுப்போயின
அவள் சுவாசிக்கின்றாள் .....!!
குளிரிலும் இதம் கண்டேன்
வெப்பதிலும் சுகம் கண்டேன்
உன் மூச்சினில்.....!!
அவள்
பிரபஞ்சததின் சிறந்த
மாதும் நீ !
மதுவும் நீ !!
பொன்அரளி பூக்களும்
வண்ணத்தில் தோற்றன....!
என் எண்ணத்தில்
அவளைக் கண்டபோது....!!
உள்ளூர உருகுகின்றேன்
இரவினை பகலாக்க
இச்சை கொட்டி சூடேற்றினாய்
உள்ளூர உருகுகின்றேன்...!
உன் இடைவழி ஒழுகும்
ஈரத்துழி கண்டு......!
Comments
Post a Comment