காதல் முறிவு



நிலவின் ஒளியை என் உள்ளத்தில் அடைத்தேன்....
கனவின் வழியே காதலும் வளர்த்தேன்....
உளி கொண்டு சிலை வடிப்பர்
விழி கொண்டு சிலை வடித்தேன்.
உள்ளம் உருகும் நேரத்திலே
கூடலும் கொண்டேன் மோகத்திலே...
பூவின் வாசம் அறிந்தவள் - இப்
புவிதன் பாசம் அறியலயே !
விளக்கின் ஒளி விட்டில் பூச்சி தாங்குமா...
விடியல் வேண்டி வின்ணிருட்டு வேண்டுமா...
பஞ்சமில்லா அழகினாள் என்
நெஞ்சத்தில் அமர்ந்தவள்
கஞ்சமில்லா காயத்தை தந்து சென்றாள்.........
வெட்டுப் பட்ட நின் மனம்
பட்டுப் போன மரமானது !
விழி அசைவால் மலர்ந்த காதல்
விழி அசைவிலையே மறைந்தது.
குளிர் மழையாய் குதூகளித்தவள்
குறுஞ்செய்தி ஒன்றை தந்துவிட்டாள்
பரிவு ஒன்றையே தந்தவள்
பிரிவு ஒன்றை கூறிவிட்டாள் !!
நித்தம் முத்தம் தந்தவள்
சத்தமில்லாமல் சென்றுவிட்டாள்
அன்று அம்பால் அடிபட்டவன் !
இன்று அன்பால் அடிபட்டேன் !!




                                            அன்புடன்
                                              ஆனந்த்.               

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா