பாவை நிலா
நிலவினை பாவையாக உருவகித்து உருவம் அளிக்கின்றார் தேவர்கள்.. வனப்பு மிகும் வனிதையாக வலம் வரும் அவளை மூவுலகும் காதல் கொள்கிறது....அவ்வாறு காதல் கொண்ட ஒருவன் வியப்பினால் அவளது வனப்பினை வர்ணிக்கும் நிலையாய் இக்கவிதையை கற்பனையால் அமைத்துள்ளேன்....
சப்தரிஷி தேவனும் உனை
சந்தனத்தில் படைத்தானோ
சதுப்புநில மல்லிகொடியை
அங்கததில் சேர்த்தானோ......
கொட்டும் மழை மேகத்தை
கருங்கூந்தலாய் வைத்தானோ
கோவக்கனி உதிரத்தை
குவி அதரத்தில் வடித்தானோ.....
புதிதாய் மலர்ந்த புஷ்பத்தை
பொன் முகத்தில் ஒளித்தானோ....
பூவையரில் புதினத்தை
பூவானில் வடித்தானோ.....
சந்தனகுவிதனை சேதாரமின்றி செதுக்கி மர்பகமொட்டின் ஆதாரமக்கினானோ
மாயைசில படைத்து...
சோபைபல கொடுத்தானோ உனக்கு
கருநீல கயலினை
கண்ணென செய்தானோ.. அவன் காண்டீப வில்லினையே....
புறுவமென படைத்தானோ.....
பரிதியவன் புகழினை
பாதியாக்கி
இவள் சுடர்விழியென
சேதி செய்தானோ.......
திரிலோகததை
இருலோகமாக்கி...
திவ்ய முகமதில் மூக்கென
. தீட்டி வைத்தனோ....
இந்திரனின் களிற்றுக் கொம்பினை கட்டையாக வெட்டி தோல் பட்டையென
ஒட்டினானோ....
.
ஆழிமுத்தினைஆதிசேச
ஆரமொட்டி.....
மணிக்கழுத்தில் மாலையாகினானோ.......அவன்
வெண்சலசமதை
வாரித்தொடுத்து
வனிதையவளுக்கு
சூடினானோ.......அவன்
இதல்கலரா கமலத்தை
இடையினுள் புகுத்தி விட்டு
இச்சை கொட்டும் இடமென
உச்சி கொட்டி போனானோ....
கற்பக விருட்சமதை களவாடி
கம்மலென வெய்தானோ..அவன்
காவியத்தில் காணா
காரிகையை செய்தானோ.....
அவன் உள்ளத்தீயை
ஓவியத்தில் செய்தானோ.....
உலகாளும் தேவிகளும் உருவத்தில் பொய்தானோ.....
வான்தாரகை விழிமதியும்
தையலென மெய்தானோ...அவள் மையல் கொள்ள மானிட
தேவரிஷியும் படைத்தானோ.....
மன்மத அம்புறாதூழியும்
அர்ப்பமாகி போனதே...
மங்கையவள்
வேல்விழியில்...
மாணிக்க பவளமுத்தும்
மோட்சம் பெற்றதே....
மங்கையவள் வருகைக்கு
மாஞாலமும் ஏங்குதே.....!!
சலசம் - தாமரை மலர்
தாரகை.- விண்மீன்
வனிதை - பெண்
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment