தன்னம்பிக்கை


                தன்னம்பிக்கை

விலையில்லா விண்மீன் தூரல்கள்
விடாமுயற்சியோடு பயணிக்கின்றன
விடியலை நோக்கி......!

வீழ்வது பலவெனினும்
வெல்வது சிலவே.......!!

வென்ற விண்மீன் நீயெனில்...
வாழ்வதற்கு ஏன் பயம் கொள்கிறாய்

வெற்றி கண்ட நீ 
தோல்வி கண்டு ஏன் துவல்கிராய்...!

கோடிக் கணக்கில் கொன்று விட்டு
அழுகை எனும் ஜாலத்தோடு பிறந்தவன் நீ.....!

ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தினை அடையாளமாய் கொண்டவன் நீ....!!

பாறைகள் மோதியே 
அலைகள் உருவாகின்றன...

ஆழத்தினை கண்டு ஏன் 
பயம் கொள்கிறாய்.....?

இருட்டிலே பிறந்த உனக்கு
இருட்டை கண்டு பயம் எதற்கு....?

கருவறை சிறையை உடைத்த நீ
காலத்தின் சிறையை உடைத்தெறி...!

விண்மீன் துகள் நீ
வின்னுயரம் பறந்து போ....!

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
பிரபஞ்சம் ஒன்றை உருவாக்கு....!!






                                       அன்புடன்
                                         ஆனந்த்

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா