கனாவில் கண்டேன்

.            கனாவில் கண்டேன்
   
நான் விழி திறக்கும் முன்
சுழி பிறக்குது........!
சொர்க்கத்திலும் ஒளி பிறக்குது...
சோதரன் உனைக்கான
வைகுண்டத்திலும் 
வழிப்பிறக்குது......!
கண்ணிமைக்கும் நேரத்தில்
கழுகொன்று பறக்குது...!
கன்னிப்பெண்கள் குலலோசை
காதோரம் கேட்குது....!!
பஞ்சபூத தெய்வங்களின் 
பண்பாட்டு கேட்குது.....!.
புவியெல்லாம் புஷ்பங்கள் 
புன்சிரிப்பு கொள்ளுது.....
அஞ்சுதல பாம்பொன்று
ஆகாயத்தில் மிதக்குது.....!
அங்கொன்று இங்கொன்று
வலம்புரி சங்கொன்று...
ஏழிரண்டு லோகத்திலும் 
எட்டாத சக்தியிது....!!
விழி மங்குது ஒளி பொங்குது
விடையில்லா வினாவொன்று விழியிரண்டில் பூக்குது....!
வருவது யாரென்று
வலியுள்ளம் கேட்குது.....!
நாதஸ்வர ஒலிகளும் நாற்புறமொலிக்குது......!!
அம்புலி ஒளிபந்து அமர்ந்தது
 ஆதிசேஷனில் வந்து....
 வெந்து தணிந்தது
 உள்ளமெனும் காடு....!
வெற்றிகண்டது இவ்
வேந்தனின் கூடு....!!
தங்க நிலாவொன்று
தாமரையில் அமர்ந்து.....
உவந்து சிரித்தது 
உன்னதன் கண்டு...!!
ஓராயிரம் விழிகள் 
ஒரு நொடி வேண்டேன்....!!
ஊர்வசி மேனகை 
உலா வரக்கண்டேன்....!!
மஞ்சள் பட்டு அணிந்திட்ட
மாதவனை கண்டேன்....
மாணிக்க பவள முத்து
மகுடத்தில் கண்டேன்....
பிரபஞசத்தின் பேரழகை
பிறை முகத்தில் கண்டேன்....
பேதையவள பதியாக
பிரபஞசத்தின் கதியாக
இவனேயென கண்டேன்....
இச்சை தீர பருகினேன்
என் தேவனின் திருமுகத்தை..
மூச்சியாகிப் போனேன் என்
மூச்சினில் கலந்துவிட்டான்...
முழுமதியும் மறைந்துவிட்டது
முழு இரவும் முடிந்துவிட்டது...
கதிரவனின் வருகையால்
களவாடப்பட்டேன் கனாவிலிருந்து
இருந்தும் விற்கப்பட்டேன்
கல்யாண ராமனிடம்.......!!







                                             அன்புடன்
                                              ஆனந்த்

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா