எங்கள் அன்பு கண்ணனே


இங்கு பாடப்பட்டுள்ள பாடலானது 
கோகுல மற்றும் பிருந்தாவன வாசிகளால் தன் அன்பு கண்ணனின்
வாழ்க்கை சரீரத்தை நினைவு கூர்ந்து கிருஷ்ணா ஜெயந்தி அன்று பாடுவதுபோல் அமைத்துள்ளேன்...


   கோடி கோடி கர்ப்பகங்கள்
   ஓங்கி வளர்ந்த ஊரினிலே
   ஆடி பாடி மகிழ்ந்திடும்
   அன்பு கண்ணனே...
   எங்கள் அன்பு கண்ணனே...
   நாடி வரும் நல்லோர்க்கு
   ஓடி வந்து உதவிடுவாய்
   நாட்டு மக்கள் மனதினில்
   நீயும் மன்னனே....
   மாயக் கண்ணனே....!

  அரக்கர் குலம் அழிவிற்கு
  அதாகதம் செய்திடுவாய்
  அன்பு கொண்ட மனங்களுக்கு
  அற்புதங்கள் புறிந்திடுவாய்...
  அன்பு கண்ணனே
  எங்கள் அன்பு கண்ணனே....!
 

 ஆவணி திங்கள் போதினிலே
 அசரீரி வாக்கினிலே
 அரி கரா ஆசிப்பெற்று
 அகிலத்தில் பிறந்தாய்....
 அன்னை மடியினிலே தவிழ்ந்தாய்
 அன்பு கண்ணனே
 எங்கள் அன்பு கண்ணனே....

 ஓம் ஹரி ஓம்... ஓம் ஹரி ஓம்

 கோகுலத்தில் கொடைவிழா..
 கோமகனின் திருவிழா
 கோடி கோடி சூரியன்
 கொண்டாடும் பெருவிழா...!
 நாங்கள் பண்பாடும் புதுவிழா

விண்ணை அளந்த பாலகனாய்
மண்ணை உண்டு தின்றாய்
அன்னை கண்டு கோபிக்க...
அதரம் திறந்து நின்றாய்...!
அன்பு கண்ணனே
எங்கள் அன்பு கண்ணனே....
வெண்ணெய் திருடி தின்றிடுவாய்
வேடிக்கைகள் செய்த்திடுவாய்
வின்னாளும் தேவர்க்கும்
வேதனைகள் போக்கிடுவாய்....
அன்பு கண்ணனே
எங்கள் அன்பு கண்ணனே...!

கோகுலத்தின் பசுக்கலெல்லாம்
கோபாலன் உன்னிடமே
குழல்ஊதும் ஒசையினால்
மதி மயக்கும் மாயவனே
மங்கையர்க்கு மன்னவனே
எங்கள் அன்பு கண்ணனே....!

  கோவம் கொண்ட இந்திரனின்
  கொட்டத்தை அடக்கினாய்
  கோவர்தன கிரிதாரி
  என்றே நாம் பாடுவோம்...!

   அறம்மீறும் அசுரர்களை
  சிரம் வெட்டிக் கொன்றாய்
  அழகு நர்த்தனங்கள் புரிந்து
  காளிங்கனை வென்றாய்...!
  அன்பு கண்ணனே...
  எங்கள் அன்பு கண்ணனே....!

  மாரி பொழியும் வேளையிலே
  மயிலாடும் சோலையிலே                        மங்கையிருடன் ஆடினாய
  மயில்பீலி சூடினாய் மாயவனே ..!
  எங்கள் அன்பு கிருஷ்ணனே....              யசோதையிடம் விளையாடினாய்          யமுனையிலே நீராடினாய்                      ராதையுடன் கோலாடினாய்...                  காதலையும் பாராட்டினாய்...!
  அன்பு கண்ணனே...
  எங்கள் அன்பு கண்ணனே...!
  மதுராநகரி வீதியிலே 
  மாதவனாய் சென்றாய்  
  மாந்தர் மனம் வென்ற
  மாயவனாய் நின்றாய்...!
        கண்ணா... 
 எங்கள் அன்பு கண்ணா...

  பிறைசூடி வில்லினதை
  விளையாட்டாய் முறித்தாய்
  பாவியவன் அசுரனுக்கு 
  பீதியினை அளித்தாய்...!


  மாதா பிதா மீட்பிற்க்கு
  மல்யுத்தம் செய்தாய்
  மாமனெனும் கம்சனவன் 
  மார்பினை கிழித்தாய்....
  மாநிலத்தை காத்தாய்.....!
  அன்பு கண்ணனே
  எங்கள் அன்பு கண்ணனே...


  கோகுலவாசி நாங்கள்
  புண்ணியம் செய்தோம்
  கோபால கண்ணனவன்
  வைகுண்டவாசி....இல்லை..!
  கோகுலவாசி
  எங்கள் கோகுலவாசி...!!





                                         அன்புடன் 
                                         அனந்த் மு
 




Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா