நமசிவாய


இறைவா....... நீயே, வளம் தரும் தலைவா....... ஈ....சனே .....என் இறைவா....... போற்றி...

ஓம்.. ம்.....ம் .....சிவாய , ஓம்......
நமசிவாய போற்றி... போற்றி...

ஒளிப்பிழம்பாய் , ஓங்காரமாய்...
அருவின் உருவாய் போற்றி போற்றி...

                 ஓம் சிவாய ஓம்

விந்திய மலையில்
குந்திய தேவன் நீயல்லவோ
வினைகள் தீர்க்கும் விநாயக 
உந்தன் சேயல்லவோ...

பிறைமுடி சூடிய
பினாகபானி நீயல்லவா...
உந்தன் திருவடி நாடிய
மானிட பித்தன் நானல்லவா.....

       மன்னனே.... என் ஈசனே....
மலைமகள் பாதி
மானிடத்தின் ஆதி
மணிக்கரம் நீட்டிடுவாய்...

முப்புலன் நீக்கி 
முழு நிலவாக்கி 
மோட்சங்கள் தந்திடுவாய்....

பதி சதி பாதி
அங்கத்திலே சேர்த்து
இவையத்தினை தழைத்தவனே.....

ஏழைப்பாழை உள்ளத்திலே
ஏகாந்தமல்கிய
ஈசன் எந்தன் மலைமகனே...

சிவ சிவ மந்திரம்
ஓம் என்னும் தந்திரம்
உள்ளத்தில் போற்றிடுவோம்....

சிலையெனும் வடிவில்
மலையெனை வாழ்த்தி
தீபங்கள் ஏற்றிடுவோம்....

பிசாசுக்கள் மத்தியிலே
பிணங்களின் நெத்தியில
பீடத்தில் அமர்ந்திருப்பாய்

சக்கரங்கள் ஏழுமதை
சக்தியாக நீ உடுத்தி
வேதத்திலே உயர்ந்திருப்பாய்

கந்தனவன் தந்தையிவன்...
காலனவன் சிந்தையிவன்.... யோகத்திலே விந்தையிவன்
ஆதியோகத்திலே விந்தையிவனே...!

ஹர ஓம்.... ஹரி ஓம்....சிவாய....

விந்திய மலையில்
குந்திய தேவன் நீயல்லவோ
வினைகள் தீர்க்கும் விநாயக 
உந்தன் சேயல்லவோ...

ஓம் நமசிவாய ஓம்.... சிவாய ஓம்...
மேதிவாகனன் பணிந்து 
நிற்கின்ற ஜோதினாயகனே...
பஞ்சபூதங்கள் போற்றி வணங்கிடும்
அஞ்செழுத்தில் அவனே....

அம்பலத்தில் ஆடுகின்ற 
அங்குசத்து தேவனே...
அன்னை காளி போற்றுகின்ற அப்புலிங்க ஈசனே...

அகண்ட மார்பில்
திரண்டு நிற்கும்
அண்ட கோடி கூறுகள்

அன்னை அப்பன்
தாண்டவத்தில்
அருளுகின்ற பேறுகள்....

அப்பனே....என் ஆண்டவனே....
உடுக்கையின் ஒலியிலே
ஓங்கார தொனியிலே
உயிர்களைப் படைத்திடுவாய் ..

உள்ளத்திலே ஓடுகின்ற வெள்ளத்திலே நீயுறைந்து...வேதனைகள் போக்கிடுவாய்....

விந்திய மலையில்
குந்திய தேவன் நீயல்லவோ
வினைகள் தீர்க்கும் விநாயக 
உந்தன் சேயல்லவோ.....!!
.......ம்...... ஓ..... ம்...... ஓ....ம்...... 



                                        அன்புடன்
                                        ஆனந்த் மு 





Comments

Popular posts from this blog

வர்கலா சுற்றுலா

காதலின் தீபம்

பாட்டு ஒன்னு பாடவா