நான் உங்கள் ஆனந்த், திருநெல்வேலி கல்வி நிலையம் ஒன்றில் போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன்.... விடுமுறை நாள் ஒன்றில் இன்ப சுற்றுலா ஒன்றிற்கு ஆயாததம் செய்தோம். அங்கு நான் அனுபவித்த புதுமையான நினைவுகளை இப்பக்கத்தில் பதிவிடுகிறேன்... வெள்ளி கிழமை (14/07/23) அன்று இரவு 10 மணியளவில் என் நண்பர்களான கிருஷ்ணா, முத்து, போஸ், ஹரி மற்றும் ஆனந்துடன் ஒரு அழகான பயணத்தை தொடர்ந்தேன்... இலக்கினை அறிந்த பருந்தை போல பறந்து கொண்டிருந்தோம் இரண்டு பைக்கில்...சலனமின்றி கிடந்த இரவை சத்தமிட்டு எழுப்பினோம்... காற்றினைக் கிழித்து காடு ஒன்றினை அடைந்தோம்...பசுமையான மரங்களும் பனிமலர் பூக்களும் எங்களை வரவேற்றது... இதமான காற்றும் இத்திசை என்று அழைத்தது..என்னவென்று சொல்வேன்...இந்திரனின் அந்தப்புர ஆறு அருவியாய் விழுந்து கொண்டிருந்தது போலும்.. அழகான மங்கை ஒருத்தி சிகை பறக்க குளித்து கொண்டிருந்தாள் போலும்... ஆம் அவளுக்கு குற்றாலம் என பெயராம்... ஏதோ இனம் புரியா மகிழ்ச்சி... இதமான காற்று இசைபாடியது உள்ளத்தில்... தெவிட்ட தெவிட்ட குளித்து முடித்தோம்.. சூடான தேநீருடன் சுகம் கண்டோம்... இரவு 1.3...
Comments
Post a Comment