அன்னை வருகின்றாள்


    அகிலங்கள் அனைத்திலும்                    ஆதியாம் பரம்பொருளே..போற்றி
    முக்கண் மனையாளே                              மலைமகளே போற்றி போற்றி
    விழிகள் ஆயிரம் பெற்றேன்                    உனைக்காண தாயே வருவாய்....!
                          ஓம் சக்தி
     தக தக திம் திம் தக தக ஓ.... ம்

   
 
   அம்மை வருகின்றாள் என்                       அன்னை  வருகின்றாள்
   அன்னை வருகின்றாள் என் 
   அம்மை வருகின்றாள்

   காலம் அனைத்தையும் காலில்               மிதித்திடும் காளி வருகின்றாள்           அன்னை சூழி வருகின்றாள்
    
  பிரபஞ்ச அழகையே பிம்பமாய்              கொண்டிடும் சுந்தரி வருகின்றாள்
   அன்னை சோடசி வருகின்றாள்  

  தக தக தக வென எங்கும் முழக்கம்... டுமு டுமு டுமு வென எங்கும் முரசும்....
               .....ஓம் சக்தி ஓம்.....
   அவள் வருகின்றாள் அன்னை               வருகின்றாள்
   ஆரவாரமாய் கோர ரூபமாய் சீரிட         வருகின்றாள்...
   அவள் கட்கம் கத்தி சுற்றிலும்                 நெருப்பாய் சூரனைக்                               கொன்றிடுவாள்

    தாரா வருகின்றாள் அவள்
    காட்சி தருகின்றாள்
    என் அம்மை வருகின்றாள்
   அருளாசியும் தருகின்றாள்
          ஓம் .....சக்தி.....ஓம் 
    நீரும் அவளே நெருப்பும் அவளே
    ஒளியும் அவளே இருளும் அவளே        அணுவும்   அவளே ...                                  அண்டமும்  அவளே...
    சக்தியும் அவளே புத்தியும் அவளே
    விண்ணும் அவளே மண்ணும்                அவளே...
    புதிதாய் மலர்ந்த பூக்களும் அவளே
    ஆதியில் தோன்றிய ஜோதியும்               இவளே.....
     குரூர ஜோதியும் இவளே....!

     திம் திம் தம தம திம் திம் தம தம                               ....ஓம் ஓம்....
  தண்ட தாரிணி கஞ்சசூடினி 
  காட்சி தருகின்றாள் 
  வெண்கல சிலையாய் மங்கள                நிலையாய் விண்ணில்                            தெரிகின்றாள்...
  என் கண்ணில் தெரிகின்றாள்

  சண்டமர்த்தினி முண்டதற்கினி            முக்கண் தேவதையோ...
   பூத பிரேதங்கள் போற்றி                           வணங்கிடும் பைரவித் தாயோ ..
   எங்கள் ஈஸ்வரியோ..... 

    அம்மை வருகின்றாள் என்                      அன்னை வருகின்றாள்
    ஆசி தருகின்றாள் 
    அருள் வாக்கும் மொழிகின்றாள்
    
     ஓம் சக்தி சக்தி .. ஓம் சக்தி சக்தி...                               ஓம்.....!
    

 மண்டை ஓடுகள் ஆரமாகவே மணிக்கழு ஆபரணம் அரவமாகவே காட்சி தருகின்றாள்
அன்னை அறிதலைச்சி வருகின்றாள்
பீறிடும் இரத்தம் சீரிடும் பாம்பாய் சிதரிட வருகின்றாள்....

திகு திகு தம் தம் திகு திகு தம் தம்                    ....ஓம் சக்தி சக்தியே....

 ஆதி சக்தியே என் உள்ளத்தில்   உறைந்தவளே...
 மலர் பங்கையமே உன் திருவடி   பணிந்து முக்தியை பெருவோமே..
 
  அன்னை வருகின்றாள் என் 
  அம்மை வருகின்றாள்
                 ........ ஓம்........
.   பம்பை உடுக்கை முழங்க முழங்க
    சங்கும் ஓலியும் சலங்க சலங்க
    அக்கினியில் ஆடிவரும்
    வெக்காளி நீயே 
    ஆலகாலனே அடியில் பணிந்திடும்      ஆங்கார மாகாளியே
    ஆதி உயிர்களும் உன்னில் பிறந்த       ஓங்கார ஒலி நீயே....!
 
     அம்மை வருகின்றாள் என் 
     ஆத்தா வருகின்றாள்
      ஆடி வருகின்றாள் அவள்
      ஓடி வருகின்றாள்

      சக்தி சக்தி.  சிவ சக்தி சக்தி.. 
                 ஓம் சக்தி சக்தியே
   முதலும் நீயே முடிவும் நீயே
   யோனியும் நீயே ராணியும் நீயே
    ஆக்கம் நீயே அழிவும் நீயே
    வேதம் நீயே ஞானம் நீயே
    ரதியும் நீயே சதியும் நீயே
    அரியும் நீயே அரனும் நீயே
    அன்பை வழங்கிடும் 
    அன்னையும் நீயே
    அனைத்தையும் காத்திடும்                      அரசியும் நீயே....!
    எங்கள் தாயே... சரணம்...
 

    ஊழி காற்றாக சூழி வருகிறாள் 
   நல் உயிர்களைக் காக்க 
   நேரில் வருகிறாள்....
   அங்கனி வருகின்றாள் அன்னை           அம்பிகை வருகின்றாள்
   கவுமாரி வருகின்றாள் தேவி 
   காளி வருகின்றாள்
   திகம்பரி தெரிகின்றாள் உடன்               துர்க்கா வருகின்றாள்
   மாலை வேளையிலே அன்னை             மாதங்கி தோன்றிடுவாள்
   பகலவன் உதிக்கையிலே அன்னை     பகவதி வந்திடுவாள்
   பாவிகளை அழித்திடவே அன்னை       பைரவி வந்திடுவாள்
   மலைமகள் வருகின்றாள் உடன்           கலைமகள் தெரிகின்றாள்
   உமையவள் வருகின்றாள் உடன்           ஈசனும் தெருகின்றார்.....!!
    
      ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி                                 ......ஓம்......


                                     அன்புடன்
                                      ஆனந்த் 

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா