வா வா நிலவே


      வா வா நிலவே     
      ஒரு காதல் செய்வோம்...
      வாழும் மட்டும் தினம் 
      கூடல் கொள்வோம்...

     அந்தி மாலை  தான் புது 
     ஆசைகள் பூக்கின்றது... 
     ஆடும் மயிலினங்கள் புது                        ராகங்கள் தொடுக்கிறது...

      தேக மேகங்கள் அது போகுமா...            மழை மோதுமா...

       உயிரின் உயிராய் உனையே                  கொள்வேன்...
       உன்னில் பிறந்த ஒரு மழலை                 ஆவேன்....

      என் காதல் மொழியே 
      ஒரு கவிதை சொல்வாய்...
      இரு விழிகள் கோர்த்து என்                    இதயம் வெல்வாய்....

       வா வா நிலவே
      ஒரு காதல் செய்வோம்..
       வாழும் மட்டும் தினம் 
      கூடல் கொள்வோம்...

      தேச தேசங்கள் நாம் போகலாம்..          குயில் பாடலாம்..
       நம் காதல் ஒடங்கள் கரை                         சேரலாம்... கவி தேடலாம்...

      வண்டும் மலரும் பாடும் பாட்டு....          வெயில் மேகம் பொழியும் 
      அந்த பாடல் கேட்டு...!!

      வேகம் ஏறும் விடியும் மட்டும்....              விரல் தாகம் தீரும் முடியும்                        மட்டும்...,
  
      வா வா நிலவே
      ஒரு காதல் செய்வோம்..
      வாழும் மட்டும் தினம் 
      கூடல் கொள்வோம்...

      அந்தி ஓடங்கள் ஆகாயத்தில்                  போகுது...
      அந்த நேரம் தான் மனம்                            அந்தப்புரம் வாழுது...;
 
       பூவின் உறவே... ஒரு ஆசை                     உண்டு...
       உன்னில் கரைய உயிர் என்னில்           உண்டு...

       விண்ணும் விரலும் வெக்கம்                   சொக்கிப் போகுது.... விழியும்                 ஒலியும் மொழிகள் திக்கிப்                     போனது...

        வா வா நிலவே
        ஒரு காதல் செய்வோம்..
        வாழும் மட்டும் தினம் 
        கூடல் கொள்வோம்...

       இரு மின்னல் வெட்டு 
       என் இதயம் தொட்டது... அது என்           கண்ணில் பட்டு நம் காதல்                       கெட்டது...

       மோக மலரிது மஞ்சம் வாடிப்                   போனது... 
       தேக ஸ்வரங்களில் நெஞ்சம்                    நாடிப்போனது ..

        அன்பின் உயிரே.... ஒரு ஊடல்              கொள்வோம்..
        இரு இதழில் தங்கி 
        ஒரு உருவம் தைப்போம்...

       பருவ மலரிதில் தேன் சுரக்கும்               நாளிது... 
      தெவிட்டும் மட்டுமே உண்ண                  போறேன் நானிங்கு... !

        வா வா நிலவே
        ஒரு காதல் செய்வோம்..
        வாழும் மட்டும் தினம் 
        கூடல் கொள்வோம்...

        பாலும் பழமும் தினம்                                உண்ணலாம் ... தின்னலாம்...                பாகம் முழுக்க பாடம்                                  படிக்கலாம்... துடிக்கலாம்...!

       காதல் உயிரே... ஒரு ஆசை                     உண்டு...
       காலம் முழுக்க நம் காதல்                         வேண்டும்...!

                   வா வா அன்பே
           ஒரு காதல் செய்வோம்...




                                           அன்புடன் 
                                             ஆனந்த் 
  
         

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

பாட்டு ஒன்னு பாடவா