ஒரு பெண்ணின் குரல்...
இருமனம் இணைந்த பின்பும் வேறு திருமணத்திற்கு தாம் திட்டமிட்டால் நான் அதில் நாட்டமில்லை என்பேன்... ஊரார் வழக்கு, உலகத்தின் பேச்சு என்று உரியடித்தால் உரிமையை விட உணர்வுகளின் மீதே ஆதிக்கம் என்பேன்... மாங்கல்ய பலம்..மங்கள பாக்கியம் என்று பேட்டி கண்டால் நிச்சயம் திருமணம் நடத்துங்கள்...
நாதசுவர ஒலிகளோடு நாற்புற உறவுகளோடு .. நட்ட வாழை மொட்டுகளோடு அல்லாமல்... சங்கொலி முழங்க திங்கள் மின்னும் அந்த ராத்திரியில் பிணங்கள் சூழ நடத்துங்கள்.. குங்குமப் பொட்டும் தொடுத்த மல்லியும் கொட்டிய முரசும் வேண்டாம்... கொள்ளிவாய் பிசாசுகளும் கொம்பெரி நாய்களும் சூழ கவனிகள் முழங்க நடந்துங்கள் கலியானம் எனக்கு... மலர்கள் சூடிய மணமேடை வேண்டாம்.. மண்டை ஓடுகள் கூடிய பிணமேடை போதும்... நாள் பார்த்து நேரம் பார்த்து மும்முடி முகூர்த்தத்தில் முதல் மரியாதை தேவையில்லை எனக்கு... காடுவரை சென்று கடைசி மரியாதை பெற்று வருவேன்...
வெள்ளை வேட்டி பெரியோரின் வீட்டிலுள்ள முதியோரின் அட்சதை தேவையில்லை... வாழ்ந்து தவித்து வெந்து தணிந்த அந்த ஆன்மாக்களின் பிடி சாம்பலைத் தூவுங்கள் என் மேல்...
ஐயர் வேதங்களும் விவாக மந்திரங்களும் அக்கினி குண்டங்களும் தேவையில்லை...ஆந்தையின் அலரலும் ஆவிகளின் குமுரலும் ஒலிக்க அசுத்த தேகத்தை அழிக்கும் அந்த அக்கினியை வலம் வருவேன்...
நடத்துங்கள் திருமணம்... அந்த மயானத்தில் எனக்கு...!!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment