உச்சியில் போகுது வட்ட நிலா


    உச்ச்சியில் போகுது வட்ட நிலா
    என் உள்ளம் போகுது வீதி உலா....

    கண்கள் மயக்கும் உன் அழகில்
    கன்னிப் பையன் நான் விழுந்தேன்
    காலம் முழுக்க உன்னுடன் வாழ
    காத்தருள் ஈசனை தினம்                          நினைப்பேன்....

    உச்ச்சியில் போகுது வட்ட நிலா
    என் உள்ளம் போகுது வீதி உலா....

    அவள் ஆயனர் வடித்த 
    அற்புத               சிலையோ...
    அழகிய நிலவின் மொத்தக்                    கலையோ.....!

     கலைமகள் ஒருத்தியே 
    அழகென கண்டேன்
    என் தலைவியைக் கண்டதும்
    அது தவறென உணர்ந்தேன்...!

     உச்ச்சியில் போகுது வட்ட நிலா
     என் உள்ளம் போகுது வீதி உலா...
    
      கிண்கிணி கிண்ண இடையழகி
      கன்னி மான்களை மிஞ்சும்                      நடையழகி....

      உதட்டு சிவப்போ செம்பருத்தி
      என் உள்ளம் முழுக்க அவள்                    ஒருத்தி.. !

      காதல் செய்யும் சேட்டையினால்
     இக்காதல் பாடலும் நான் படிப்பேன்

      உச்ச்சியில் போகுது வட்ட நிலா
      என் உள்ளம் போகுது வீதி உலா....

       இத்தனை நாளாய்                                       கண்டதில்லை...
       என் இதயம் முழுக்க
        நின்றவள் இல்லை....!

      கைகள் கோர்த்து நாம் நடக்க...              அந்நிலவின் ஒளியில் நீ சிரிக்க
      சித்தம் மயங்கி போகின்றேன்
      சிந்தையில் நீ இருப்பதனால் ...

      சிந்தையாய் நீ இருப்பதனால்....!!

      நேத்திர மொழியில் 
      சாஸ்திரம் கண்டவன்
      உன் ஓரக்கருவிழி
      ஒரு நொடி கண்டு
      உள்ளம் துடிக்கத் திரிக்கின்றேன்..

      உச்ச்சியில் போகுது வட்ட நிலா
      என் உள்ளம் போகுது வீதி உலா...

      மேனகையாக நீயிருக்க                            மன்மதனாக நானிருக்க
      காதல் லீலைகள் புறிந்திடுவோம்
      காவியம் ஒன்றை செய்திடுவோம் 

       சின்ன பெண்ணே
       உன் அழகில்
       சிற்பம் ஒன்றை 
       செய்து        வைத்தேன்....

       வான்வாழி மங்கைகள் வந்தனரே
       வியப்பில் சித்தம் திகைத்தனர்...
       மான்விழி மங்கை
       மயக்குற சுந்தரி
       யாரிவள் என்றனர்...!!

        காதல் கொஞ்சும் கண்களில்
        கர்வத்தோடு நானுரைத்தேன்...
        இக்கன்னிகை உங்களில்                        சிறந்தவளே...
        காலத்தால் அவள் என்னவளே...!!





                                 அன்புடன்
                                   ஆனந்த் 

      

       


     
     



Comments

Popular posts from this blog

வர்கலா சுற்றுலா

காதலின் தீபம்

பாட்டு ஒன்னு பாடவா