யாரவள்....
யாரவள்,
மலர்கொடியோ அவள் மல்லிகையோ....
அந்த மேகங்கள் பொழிகிறதே...
சந்திரையோ அவள் ஆதிரையோ அந்த இரவும் விழிகிறதே....
மொழித்திடும் விழி மோகினியோ...மெல்ல
மோகங்கள் வரைகிறதே....
துடித்திடும் தத்தை மாங்கனிகள்...அவள் மேகலை வாடிடுதே...
செங்கனியா அவள் பைங்கொடியா..எந்தன் பாமனம் தவிக்கிறது...
பொற்குவளையோடு அடி சதங்கையுமே..சங்க நாளங்கள் பிடிக்கிறதே...
காமினியோ அவள் நாகினியோ..சடைநாகங்கள் சூடினாளே....
அம்புலியோ அவள் அலைதிரையோ..கை வளையலும் நிகண்டிடுதே...
மிஞ்சியதோ மனம் துஞ்சியதோ...மின்னல் மேகங்கள் தூண்டிவிட்டாள்.....
சுந்தரியோ அவள் இந்திரையோ.... செருவிளையினால் செய்தவளோ.
மங்கையோ அவள் மாளிகையோ.. தங்கிட மனம் தவிக்குதே...
நித்திலமோ கற்பகமோ கலைமகளோ பெண்ணே...
எய்திடுவாய் வேல்விழிகள் என்மீது கண்ணே....!
ஆதிரை - நட்சத்திரம்
மொழி - பேச்சு
தத்தை - கிளி
மேகலை - ஒட்டியாணம்
குவளை - கம்மல்
சடைநாகம்- சடையில் சூடும். ஆபரணம்
அம்புலி - நிலவு
அலைதிரை - அலைகடல்
செருவிளை - வெள்ளை நிற பூ
நித்திலம் - முத்து
அன்புடன்
ஆனந்த் மு
Comments
Post a Comment