Posts

வெள்ளைபுறா

Image
      வாழ்வியல் தத்துவ கவிதைகளும் என்னோடு உறவாடும் எண்ணற்ற சிந்தனைகளின் வெளிப்பாடும் இங்கு சிறகு விரிக்கும்.....!! 🪶.    நிலவில்லா நட்சத்திரமில்லா                 அந்த இரவுகளில் தனிமையின்             கதவுகளில் முட்டிக்                                     கொண்டிருப்பேன்...! 🪶.    வாழ்வெனும் கடலில்           துடுப்புகளற்ற ஓடங்களாய்                      தவிக்கின்றேன் .. 🪶.    எனை எரிப்பதற்கு          விறகுகள் வேண்டாம்           மலர்கள் போதும்          மௌனமாய் சூடிக்கொள்வேன்..! 🪶.    நான் இன்றும்          பாலகனாய் இருந்திருந்தால்           அந்...

தியாகம்

Image
    செம்முளரி பால் பருகி செழித்து            பருத்து சினை பெற்றதோர்                      சுனைவாழ் மண்டூக - மதை கண்டு      பசித்து உண்டிட உவந்ததோர் ஓர்          அரவமதை கண்டு மருண்டு                    காத்திட விளைந்த்ததோர்                        கயல்.....     தாவி துள்ளியது தன்னுயிர்                    மாய்த்தது......!!                               அன்புடன்                          ஆனந்த் மு        கயல் - மீன்        முளரி - தாமரை        மண்டூகம் - தவளை       ...

யாரவள்....

Image
யாரவள்,     மலர்கொடியோ அவள்                              மல்லிகையோ....     அந்த மேகங்கள் பொழிகிறதே...      சந்திரையோ அவள் ஆதிரையோ         அந்த இரவும் விழிகிறதே....       மொழித்திடும் விழி                                    மோகினியோ...மெல்ல        மோகங்கள் வரைகிறதே....       துடித்திடும் தத்தை                                      மாங்கனிகள்...அவள் மேகலை              வாடிடுதே...            செங்கனியா அவள்                                     பைங்கொடியா..எந...

காதலின் தீபம்

Image
❤️என் உள்ளமும் உணர்வும்                        உறைந்து போனது...     உன் கண்ணில் என் பிம்பம்  ❤️சதையாலான      சவப்பெட்டி     அவள் விழிகள்...!! ❤️உயிர்களை கொல்லும்       மந்திர குளம்      அவள் ஊமை விழிகள்...!! ❤️என் நெஞ்சம் மஞ்சம்     இரண்டிலும் தஞ்சம் கொண்ட                நந்தவனப்பூ அவள்...! ❤️பார்வையிலே விதைத்து விட்டு           சென்றாய்.காதல் என்னும்                       விதையை..     மலர் பூத்து நிற்கின்றேன்..     எனை வாசம் செய்து விடு...!! ❤️என் மனவானில் சஞ்சரிக்கும்                பொன் நிலவு நீ...      மோக மேகங்கள் அவ்வப்போது             நமை கடக்கின்றன...!! ❤️முத்தங்கள் மொத்தம் எத்தன...

கைக்கூ கவிதைகள் பகுதி 2

Image
ஜாதிகள்          குட்டையும் நெட்டையுமாக          கொடிக்கம்பங்கள்           ஜாதிகளை தாங்கியபடி..!! விருந்து          குளமெங்கும் கொண்டாட்டம்        தவளைக்கும் தாமரைக்கும்                     திருமணமாம்...        விருந்துக்கு தயாரானது                           கொக்குகள்...!! பசி        ஆற்றங்கரையில்                                         அமலைச்செடிகள் அகற்றம்..        பசியாறியது காக்கைகள்..!! அவலம்        கோயில் வாசலில் மல்லிப்பூ                   விற்றாள்   ஒரு விதவை        ...

ஒரு வரி கவிதைகள்

Image
                  ஒரு வரி கவிதைகள்       அன்னை              அன்பின் அட்சயப் பாத்திரம்..!          பள்ளியறை              சிற்பங்கள் செதுக்கும்              சித்திரக் கூடம்...!         தெருவிளக்கு                  இரவில் மட்டுமே               அவள் சிரிப்பாள்...!!                  வேதனை                காற்று ஊதும்                                               விரகடுப்பு..           காதலி         தொடத்தூண்டும் மின்சாரம்      ...

பாட்டு ஒன்னு பாடவா

Image
ஆண் : ஆடிவரும் வெள்ளி நிலவே...              என்ன தேடிவரும்               பொண்ணு       நிலவே...                பாட்டு ஒன்னு நான் பாடவா..              காதல் கொஞ்ச நீ கூடவா...! பெண் : ஆடிவரும் வெள்ளி நிலவு..                 உன்ன தேடிவரும்                                        பொண்ணு   நிலவு...!                 காட்சி ஒன்னு நான்                                    காட்டவா..                 காதல் சூடு கொஞ்சம்                        ...